ஓவரா பேசிய அஜித்! காலில் விழ வைத்த மூத்த அரசியல்வாதி
தமிழ் சினிமாவில் முன்னணிநடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித்குமார் தற்போது மீடியாக்களை சந்தித்து வருவது கிடையாது. அதேபோல் எந்த சமுகவலைத்தளங்கள், படங்களின் நிகழ்ச்சிகளையும் தவிர்த்து வருகிறார். ஆனால் ஒரு 10 வருடங்களுக்கும் அஜித் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தான் வந்தார்.
இடையில் ஏற்பட்ட சில சிக்கல் தான் அஜித்தை மீடியாக்களிடம் இருந்து தள்ளி வைத்தது. அப்படி மிகப்பெரிய சம்பவம் ஒன்று தான் அஜித்தினை இப்படியான மனிதாராக மாற்றியிருக்கிறது.
அஜித் சர்ச்சை பேச்சு
திரைக்கலைஞர்களை கலைஞர் ஆட்சி காலத்தின் போது அவர்களுக்கு என்று நிலம் ஒதுக்கிய கலைஞர் கருணாந்தியை பெருமைப்படுத்த கடந்த 2010ல் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் பேசிய அஜித்குமார் மேடையில், 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக தமிழகத்திற்காக உழைத்து கொண்டிருக்கும் தலைவரே' என வாழ்த்திப் பேச ஆரம்பித்து பின்னர், 'சமூக நிகழ்ச்சிகளுக்கு எங்களைப் போன்ற சினிமாவில் இருப்பவர்களை மிரட்டி வரவைக்கின்றனர்.
எங்களுக்கு அரசியல் வேண்டாம். யாரும் எங்களை கட்டாயப்படுத்த கூடாது என்று நீங்கள் தான் உத்தரவு பிறப்பிக்கவேண்டும்' என்று பேசியிருந்தார்.
ரஜினிகாந்த் ஆதரவு
இதற்கு மேடையின் கிழிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார். அனைவரும் கலைஞரை பாராட்டிக்கொண்டிருந்த வேளையில் அஜித் இப்படி பேசியது, ஒரு நிமிடம் அரங்கமே அதிர்ச்சியில் நின்றது. இதற்கு சில ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்ப, ஜெயலலிதா விசுவாசி அஜித் என்றும் விமர்சிக்கப்பட்டார். இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் விளக்கமளித்து பேசியிருந்தார்.
கலைஞர் அஜித்தை புகழ்தல்
மேலும் ரஜினிகாந்த், அஜித் இருவரும் சென்று கலைஞர் கருணாநிதியை நேரில் சந்தித்து பேசினார்கள். காலில் விழுந்து அஜித் ஆசிப்பெற்ற வீடியோவும் வெளியாகியது. இதுகுறித்து கலைஞர் கூட அஜித் ஒரு தும்பை மலர், அது மாசற்ற மலர் என்று பெருமையோடு புகழ்ந்து அறிக்கையில் வெளியிட்டு பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.