அஜித்தால் இலவுகாத்த கிளிபோல் இருந்த இயக்குனர்!! நம்பவைத்து ஏமாற்றிய கமல்..
உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. இப்படத்தின் ஷூட்டிங் பல விசயங்களில் தடைப்பட்டு எப்படியோ இயக்குனர் சங்கர் முடித்து தொழிட்நுட்ப வேலைகளையும் பார்த்து வருகிறார்.
இப்படத்திற்கு பின் கமிட்டாகிய விக்ரம் படமே வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில் கமல் ஹாசன் அடுத்து யாருடன் கைக்கோர்ப்பார் என்று எதிர்ப்பார்த்தனர். அப்படி அஜித்தை கழட்டிவிட்டு பல கதைகளை பல நடிகர்களுக்கு கூறினார்.
ஆனால் அஜித்தின் கதைகளத்தில் இருந்து எச் வினோத்தால் வெளியேற ஒரு வருடமாகியது. எச் வினோத், ஒரு வழியாக கமலிடன் கதையை கூறி கன்ஃபார்ம்மும் செய்துவிட்டார்.
இந்த கதையையும் வினோத் வேறொருவரிடம் கூறிடுவாரோ என்று பயந்து கையில் துப்பாக்கியுடன் சுடும் வீடியோவையும் வெளியிட்டு படத்தை உறுதிசெய்தார். ஷூட்டிங்கும் விரைவில் ஆரம்பிக்கும் என்று கமலுக்காக எச் வினோத் காத்திருந்து வருகிறார்.
இந்நிலையில் எச் வினோத் படத்தில் கமிட்டாகிய இடையில், இயக்குனர் மணிரத்னம் படத்தையும் ஆரம்பித்திருகிறார். இதுபற்றி நவம்பர் 7 ஆம் தேதி அறிவிப்போடு பிரமோ வீடியோ வெளியாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில், மணிரத்னம் குறித்த தகவல் 7 ஆம் தேதி உறுதியாக வெளியாகும் என்று கூறினார்.
ஆனால் அப்படத்தின் ஷூட்டிங்கே
நவம்பர் 7 ஆம் தேதி
ஆரம்பிக்கவுள்ளாராம் கமல். இப்படி எச்
வினோத்தை நம்ப வைத்து
காத்திருக்கவும் வைத்து
ஏமாற்றிவிட்டாரே என்று ஒரு கேள்வி
எழுந்து வருகிறது. இதை தான் அஜித்தும்
விடாமுயற்சி படத்திற்கு செய்திருக்கிறார்.