கூட்டமெல்லாம் குடும்பமாகிவிடாது..வழி தவறி போகவேண்டாம்!! கமல்ஹாசன் விமர்சனம்...
Kamal Haasan
Dravida Munnetra Kazhagam
M K Stalin
Gossip Today
Thamizhaga Vetri Kazhagam
By Edward
தவெக விஜய்யின் அரசியல் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பேட்டிகளிலும், மேடைகளிலும் விமர்சித்து பேசு வருகிறார்கள். அப்படி விஜய்யின் பரப்புரையின்போது கூட்டம் கூடுவது குறித்தும் சிலர் விமர்சித்து பேசி வருகிறார்கள்.

அந்தவகையில், திமுகவிற்கு ஆதரவளித்து வரும் கமல் ஹாசன், மேடையொன்றில் விஜய் குறித்து மறைமுகமாக சாடி விமர்சித்திருக்கிறார்.
கமல்ஹாசன்
அதில், இங்கு பெருங்கூட்டம் வந்துள்ளது, எந்த அசம்பாவிதமும் இல்லை, ஒரு விபத்து இல்லை. கூட்டம் நடத்துவதற்கும் இது ஒரு முன் உதாரணம், வழிதவறி போகவேண்டாம், கூடமெல்லாம் குடும்பமாகிவிடாது, அது கலைந்துவிடும்.

திராவிட குடும்பம் 75 ஆண்டுகளாக கட்டிக்காத்த குடும்பம் என்று திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கமல் ஹாசன் விஜய் பரப்புரைக்கு கூடிய கூட்டத்தை பற்றி மறைமுகமாகி பேசியுள்ளார்.