கோடிகளை அள்ளிக்குவித்த உலகநாயகன்.. விக்ரம் படத்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு குண்டைத்தூக்கி போட்ட கமல் ஹாசன்..

Kamal Haasan Lyca Vikram Movie Shankar Shanmugam Indian 2
By Edward 2 மாதங்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் விக்ரம் படத்தின் 500 கோடி வெற்றிக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட சங்கரின் பிரம்மாண்ட பயணம் சில பிரச்சனைகளால் தடைப்பட்டது.

கொரோனா, ஷூட்டிங் விபத்து, காஜல் அகர்வால் வெளியேறியது, விவேக் மரணம், லைக்காவுடன் பிரச்சனை என்று பல பிரச்சனைகளை தாண்டி தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் தாத்தாவின் இளமைப்பருவத்தை பற்றிய காட்சிகள் எடுத்து வரும் நிலையில் கமலின் சம்பளம் இந்தியன் 2 வில் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்திற்கு முன் 130 கோடி வாங்கவிருந்தார் கமல் ஹாசன். ஆனால் விக்ரம் படத்தின் வெற்றியால், 500 கோடி வசூல் பெற்றதை அடுத்து கமல் ஹாசனின் சம்பளமாக 150 கோடி கிரெடிட் செய்யப்பட்டுள்ளதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Gallery