மூத்தவயது நடிகருடன் ரொமான்ஸில் கமல் மகள் ஸ்ருதிஹாசன் வைரலாகும் வீடியோ!

kamal kamalhasan biggboss
By Jon Dec 28, 2020 06:06 PM GMT
Report

சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்தவர் நடிகர் கமல் ஹாசன்.

அவரை தொடர்ந்து தன் மகள்களையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தந்தை பெயரை பயன்படுத்தி சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானாலும் தமிழ், தெலுங்கு சினிமா நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகை என்ற நிலைக்கு வந்தார்.

இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்று சில படங்களில் நடித்து வந்தார். சாதாரணமாகவே க்ளாமரில் நடிக்கும் சுருதி பாலிவுட் பக்கம் எல்லைமீறிய காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோபிசந்த் கதாநாயகனாக நடிக்கும் கிராக் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளாராம். மேலும் இந்த படத்தில் இருந்து ‘கோரமீசம் போலீசோட’ என்ற பாடலின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

இந்தப் பாடலை ரம்யா பெஹாரா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வீடியோ முழுவதும் ஸ்ருதிஹாசன் பயங்கர ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளார்.

அதோடு, ஸ்ருதிஹாசனின் ரொமான்ஸை பார்த்த பலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனராம்.