அந்த தாடி போதும் அவருக்கு! கமலின் இரு படத்தை மிஸ் செய்த சீக்கா!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கமல் ஹாசன். அவர் படங்களில் நடிக்க பல நட்சத்திரங்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அப்படி சமீபத்தில் 1983 கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற கபில் தேவ் வாழ்க்கையை பற்றிய படமாக எடுக்கப்பட்ட படம் 83.
இப்படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. டிசம்பர் 24ல் வெளியாகவுள்ள இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழாவின் போது கமல் ஹாசன் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பற்றி பேசியுள்ளார்.
அதில் பஞ்ச தந்திரத்தில் யூகி ரோலில் அவர் நடிக்கவிருந்ததாகவும் சில காரணங்களால் அது நடக்க முடியாமல் போனதாகவும் ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். மேலும் கமல் ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கூட சீக்கா நடிக்கவிருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் கண் சிமிட்டுவதை பார்த்து தான் மீண்டும் கோகிலா படத்தில் நடித்திருந்தேன் என்றும் கூறியுள்ளார் கமல் ஹாசன்.