விக்ரம் படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளமே இத்தனை கோடியா! கமல் படம்னா சும்மாவா?

Kamal Haasan Suriya Anirudh Ravichander Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 29, 2022 05:10 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுடன் இனைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். மிகுந்த எதிர்ப்பார்ப்புகள் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகளவில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் பிரமோஷன் வேலைகளை கமல் ஹாசனும், லோகேஷ் கனக்ராஜுன் விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள்.

நடிகர் சூர்யா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதால் இப்படத்தின் மார்க்கெட் இன்னும் அதிகமாக பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனையும் படைக்கவுள்ளது, இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் டெக்னிஷன்களின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தன்னுடைய தயாரிப்பு என்றாலும் அதற்காக 50 கோடி சம்பளமாக நடிகர் கமல் ஹாசன் பெற்றுள்ளாராம். மேலும் 118 நாட்கள் படப்பிடிப்பில் 60 நாட்கள் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இவரை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி 10 கோடி சம்பளமும், பகத் பாசிலுக்கு 4 கோடி சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அனிரூத்திற்கு 4 கோடி ரூபாயும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 8 கோடி சம்பளமும் பெற்றுள்ளார். கைதி படத்திற்காக 30 லட்சம் வாங்கிய லோகேஷ் பீஸ்ட் படத்தில் 1,5 கோடி அளவில் சம்பளமாக பெற்றர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் 4 கோடி என விக்ரம் படத்தில் மொத்தமான சம்பளத்திற்காக சுமார் 80 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்படம் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்றால் லோகேஷ் கனகராஜ் இந்தியளவில் உச்சத்தை தொடுவார் என்று கூறப்படுகிறது.