கிப்ட் கொடுப்பார்ன்னு பாத்தா இச் கொடுத்த கமல் ஹாசன்! யோசித்து பார்க்காத நடிகர்..

Kamal Haasan Vikram Movie Robo Shankar
By Edward Jun 17, 2022 03:10 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசனின் நடிப்பில் ஜூன் 3ல் வெளியான படம் விக்ரம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட இப்படத்தின் வசூல் தற்போது 350 கோடியை நெருங்கியுள்ளது. படத்தில் வேலை செய்த இயக்குனர் லோகெஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் 60 லட்சம் மதிப்பிலான உயர்ரக காரினை பரிசளித்தார்.

கமல் ஹாசனின் பெருந்தன்மை

அதேபோல் விக்ரம் படத்தின் 13 உதவி இயக்குனர்களுக்கு தல ஒருவருக்கு பைக்கும் பரிசளித்தார். 5 நிமிட காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு 20 லட்சம் மதிப்பிலான் வாட்ச்-யும் அளித்தார். இதனிடையே ஏன் விஜய் சேதுபதி, பகத்பாசி, அனிருத்துக்கு எந்த பரிசும் வழங்கவில்லை என்று கேள்விகள் எழுந்தும் வருகிறது.

இதற்கு அனிருத், எனக்கு விக்ரம் படத்தை கொடுத்திருக்கிறார் கமல் சார் என்றும் அவருடன் நடிக்க வைத்திருக்கிறார் என்று விஜய் சேதுபதி கூறியதும் தற்போது வைரலாகியது. இந்நிலையில் கமல் ஹாசனின் தீவிர ரசிகராக இருந்து பல தியேட்டர்களுக்கு சென்று பேனர், கொண்டாட்டம் என்று விழாப்போல் கொண்டாடி இருக்கிறார் ரோபோ சங்கர்.

வெறிகொண்ட ரசிகன் ரோபோ

தற்போது தன் குடும்பத்தினருடன் உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்துள்ளார் ரோபோ சங்கர். அப்போது தனக்கு ஒரு முத்தம் கொடுக்குமாறு ரோபோ சங்கர் கேட்க, உடனே அவரது கன்னத்தில் நச்சென்று இழுத்து ஒரு முத்தம் கொடுத்துள்ளார் கமல் ஹாசன்.

இதனை பெருமையாக இணையத்தில் பகிர்ந்தும் இருக்கிறார் ரோபோ சங்கர். எதாவது கிஃப்ட் கேட்டு இருக்கலாமே ரோபோ என்று கலாய்த்து வருகிறார்கள்.

Gallery