குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்..

Bollywood Indian Actress Marriage Actress
By Jai Aug 22, 2026 07:30 AM GMT
Report

கங்கனா சர்மா

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா சர்மா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தான் திருமணம் செய்துகொண்ட நபர் குறித்து உண்மையான ரூபத்தை தாமதமாக தெரிந்துகொண்டது குறித்தும் பேசியுளளார்.

குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்.. | Kangna Sharma Reveals Marriage Secret Husband Past

அதில், கடந்த 2019ல் யோகேஷ் என்பவரை சந்தித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யோகேஷ் வெளிநாடுகளிலுள்ள ஆன்மீகத் தலங்களுக்கு தன்னை அழைத்துச் சென்றார். ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை. ஒரு தீவில் வைத்து யோகேஷ் என்னிடம் காதலை வெளிப்படுத்தியப்பின் அவரை திருமணம் செய்துகொண்டேன்.

திருமண வாழ்க்கை தொடங்கிய சில மாதங்களில் ஒரு அதிர்ச்சியை தான் சந்தித்தேன். திருமணமாகி சுமார் இரண்டரை மாதங்களில் தான் கர்ப்பமானதாகவும், அந்த காலக்கட்டத்தில் யோகேஷ் தன்னை தன்னுடைய தாயார் வீட்டில் கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்.. | Kangna Sharma Reveals Marriage Secret Husband Past

பின் கங்கனாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்தப்பின் தான் தன்னுடைய கணவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தெரிந்தது. தனக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டபோது யோகேஷுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தது என்று பிரசவத்திற்கு பின் தான் தெரிந்து கொண்டேன்.

முதல் மனைவி

அதன்பின் அவர் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்தார் அதுமட்டுமில்லாமல், யோகேஷுக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததது, அதன்பின் தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து இறுதியில் யோகேஷிடமிருந்து விவாகரத்து பெற்றதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.

குழந்தை பிறந்தப்பின் எல்லாமே தெரிந்தது!! முன்னாள் கணவர் பற்றி நடிகை கங்கனா ஓபன்.. | Kangna Sharma Reveals Marriage Secret Husband Past

மேலும், திருமணமும், கர்ப்பமும் தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் மோசமான காலகட்டமாக இருந்தாலும் அதுவே தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாக கங்கனா சர்மா தெரிவித்துள்ளார்.