29 வயது நடிகையை ஓராண்டு உடல்ரீதியாக துன்புறுத்திய சீரியல் நடிகர்!! அதிரடி காட்டிய போலீசார்...
பாலப்பா - 29 வயதான நடிகை
கன்னடம் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி நடிகரான சரித் பாலப்பா, பிராந்திய, முத்துலட்சுமி தொடர்களில் நடித்து பிரபலமானார். இவர் மீது 29 வயதான நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை போலிசாரிடம் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடிகரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வழக்கு குறித்து போலீசாரின் விளக்கத்தில், கடந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 2024 டிசம்பர் 13ஆம் தேதி வரை ஒரு வருடமாக இந்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தெலுங்கு மற்றும் கன்னடத் தொடர்களில் நடித்து வரும் நடிகை, பாலப்பாவை 2017ல் சந்தித்துள்ளார்.
பாலப்பா கைது
இருவரும் தொழில் ரீதியாக பல இடங்களில் நடித்துக்கொண்டதை தொடர்ந்து பாலப்பா நடிகையை மிரட்டி வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்டதாக புகர்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரதாரர் தனியாக வசித்து வருவதை தெரிந்து கொண்ட நடிகர் பாலப்பா, ஒருமுறை தனது நண்பர்களுடன் அவரது வீட்டிற்குள் புகுந்து, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை புகாரளித்ததை தொடர்ந்து பாலப்பா மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது.
பாலப்பா அவ்வப்போது பணம் கேட்டு மிரட்டியதாகவும் அவரின் அந்தரங்க புகைப்படங்களை மற்ற நடிகர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுவிலும் பகிர்ந்து விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் நடிகை புகாரில் கூறியுள்ளார். அதோடுமட்டுமின்றி தன்னை மிரட்டுவதற்காக அரசியல்வாதிகள், ரவுடிகள் மற்றும் போலீஸ் அதிகார்கள் உள்ளிட்ட செல்வாக்குமிக்க நபர்களுடனான தொடர்புகளை பயன்படுத்தியதாகவும் நடிகை புகாரில் தெரிவித்துள்ளார்.
மனரீதியாக துன்புறுத்துதல்ம் உடல் ரீதியாக தாக்கியது, கொலை மிரட்டல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் எஃப் ஐ ஆர் பதிவு செய்து நாஜராஜஸ்வரி நகர் காவல் நிலைய போலிசார் வழக்குப்பதிவு செய்து பாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் விளக்கம் கொடுத்துள்ளனர்.