தன் சொந்த பிள்ளைகளை விஜய் சேதுபதி இப்படியெல்லாம் நடத்துவாரா.. இது தெரியாம போச்சே
விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. தற்போது, படங்களில் நடிப்பது மற்றும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என பிஸியாக வலம் வருகிறார்.
இவரது 50 - வது படமான மகாராஜா தமிழ் சினிமா மட்டுமின்றி சீனாவிலும் வெற்றிகரமாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது குழந்தைகள் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது தெரியாம போச்சே
அதில், " நான் என் மகன் சூர்யாவை அப்பா எனவும், மகள் ஸ்ரீஜாவை அம்மா என்றும் தான் அழைப்பேன். ஆனால், அவர்கள் இருவரும் என்னை அதிகாரம் செய்வார்கள்.
தினமும் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடந்தது என்பதை குறித்து அவர்களிடம் கூறுவேன். எந்த விஷயமாக இருப்பினும் அவர்கள் கருத்தையும் கேட்பேன்.
என் பிள்ளைகள் மத்தியில் நான் அப்பா என்ற பிம்பத்தை உருவாக்க நினைப்பதில்லை. சொல்லப்போனால் நான் அவர்கள் முன் ஒரு குழந்தை போன்று தான் தெரிகிறேன்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, விஜய் சேதுபதியின் இந்த பேட்டி பலரின் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.