கவிஞர் கண்ணதாசன் மகன் கோபியை 9 முறை அசிங்கப்படுத்திய வெற்றிமாறன்! இதுதான் நடந்ததா?

Vetrimaaran Gossip Today
By Edward May 19, 2022 09:55 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கவிஞராகவும் பாடலாசிரியராகவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியும் கட்டுரைகள் எழுதி நாளிதழ் ஆசிரியாராகவும் இருந்து கொடுக்கட்டி பறந்தவர் கவிஞர் கண்ணதாசன்.

இந்திய அரசாலும் தமிழக அரசாலும் பல விருதுகள் பெயர்கள் கொடுத்து கெளரவிக்கப்பட்ட கலைஞராக திகழ்ந்தார். அவரின் மகனாக பிரபல சீரியல் திருமதி செல்வம், இவன் வேற மாதிரி என்ற படத்தில் நடித்து பிரபலமானார் கோபி கண்ணதாசன்.

இப்படத்தினை தொடர்ந்து விஜய்யின் கத்தி படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில் தான் சினிமாவில் பட்ட கஷ்டங்கள் கசப்பான அவமானங்கள் பற்றி பகிர்ந்துள்ளார்.

லைக்கா பிரடொக்ஷனால் இந்தியன் 2 படத்திலும் மாஸ்டர் படத்தில் நடிக்கவிடாமல் என்னை அசிங்கப்படுத்தினார்கள். திட்டமிட்டு என்னை இப்படியாக நடத்தினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இயக்குனர் வெற்றிமாறன் என்னை 9 முறை வரவழைத்து அவமானப்படுத்தி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் என்னை பார்க்கணும் என்று எனக்கு அவரது ஆபிஸில் இருந்து கால் வந்தது. நான் உடனே செல்வேன். உள்ளே அவரை பார்த்ததும் உடனே சொல்லி அணுப்புறேன் என்று வெற்றிமாறன் தெரிவித்து அனிப்பிவிடுவார்.

ஒருமுறை என்னை அழைக்க கார் வீட்டிற்கு வந்து கூட்டிச்சென்று படப்பிடிப்புக்கு அழைத்து சென்றனர். அப்போதே டயலாக்கினை கொடுத்தார்கள். என்னால் அதை பேசமுடியாமல் போனதால் வெற்றிமாறன் சென்று விடுகிறார்.

பின் எனக்கு கையில் காசை கொடுத்து அனுப்பி வைத்தனர். இப்படி ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை என்று குழப்பத்தில் இருந்தேன். இதுதான் எனக்கு கசப்பான அணுபவமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.