கார்த்தியின் தோழா படத்தை மிஞ்சிய நபர்.. தூக்கி வீசிய ஊருகாயால் 5 லட்சம்
நடிகர் கார்த்தி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் தோழா. தமன்னா, பிரகாஷ்ராஜ், நாகர்ஜூனா, அனுஷ்கா செட்டி போன்றவர்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் கார்த்தி எதர்ச்சியாக வரைந்த ஓவியத்தை நாகர்ஜுனா பல லட்சத்திற்கு விற்று கார்த்தியிடம் கொடுப்பார்.
அதனை என்ன வென்றே தெரியாமல் பிரகாஷ்ராஜ் வாங்கிவிடுவார். பல லட்சம் கொடுத்து வாங்கிய ஓவியம் நான் தான் வரைந்தேன் என்று தெரிந்தும் பிரகாஷ் ராஜ் அதிர்ச்சியாகி விடுவார். இதே சம்பவம் தான் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபருக்கு நடந்துள்ளது.
மேத்யு கிரிஃபின் என்ற படைப்பாளி, சீஸ் பர்கருக்கு இடையில் இருந்த ஊருகாயை எடுத்து வீட்டின் உள் மேற்கூரையில் வீசியுள்ளார். அந்த ஊருகாயை அப்படியே புகைப்படம் எடுத்து கலைபடைப்பு என்று கூறியதோடு அதனை சுமார் 4.9 லட்சத்திற்கு விற்றுள்ளார்.
தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி நானும் இதே பண்ணி சம்பாதிக்க முடியுமா என்று கேட்டு வருகிறார்கள்.