மும்பையில் நண்பர்களுடன் படம் பார்க்க சென்ற நடிகர் கார்த்தி!! தியேட்டரை விட்டு விரட்டிய நிர்வாகம்
தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் மகனாவும் சூர்யாவின் தம்பியாக இருந்த போதிலும் தனக்கென ஒரு திறமையை கொண்டு உச்சத்தில் இருந்து வருகிறார்.
நடிக்க ஆரம்பித்த முதல் படமே உச்சக்கட்ட வரவேற்பை பெற்றுக்கொடுத்த நிலையில், வெளிநாட்டி பட்டப்படிப்பை முடித்துவிட்டு மணிரத்னம் அவர்களுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றி நடித்தும் வந்தார் கார்த்தி.
அவர் இயக்கத்தில் காற்று வெளியிடை மற்றும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து மிகப்பெரிய ஆதர்வை பெற்று வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ஜப்பான் படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் கார்த்தி படத்தினை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அவரையே தியேட்டரை விட்டு வெளியேற்றிய சம்பவம் நடந்துள்ளது. தன் நண்பர்களுடன் கல்லூரி படத்திருந்த போது 1995 வெளியான ரங்கீலா என்ற இந்தி படத்தை பார்க்க சென்றுள்ளார்.
மும்பை தியேட்டரில் பார்க்க சென்ற போது, அங்கு நாங்கள் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்த போது எங்களை வெளியேற்றிவிட்டார்கள். ஆனால் அடுத்த ஷோக்களுக்கான டிக்கெட்டினை வாங்கி உள்ளே சென்றோம்.
அங்கு ஓடி ஆட்டம் போட்டால் வெளியே தான் அனுப்புவார்கள் அதனால் தான் எங்களை வெளியேற்றினார்கள் என்று பொன்னியின் செல்வன் படத்தின் மும்பை பிரமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருந்தார் கார்த்தி.