இவ கூட எனக்கு ரொமான்ஸ் சீன் வைக்காதீங்க, இயக்குனரிடமே சொன்ன கார்த்திக்
Karthik
Actors
Tamil Actors
By Tony
தமிழ் சினிமாவில் 80,90 களில் கொடிக்கட்டி பறந்து நடிகர் கார்த்திக். இவர் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
பல மெகா ஹிட் படங்கள் கொடுத்த கார்த்திக் சினிமாவிலிருந்து தற்போது ஒதுங்கி இருக்க, அவருடைய மகன் கௌதம் கார்த்திக் தற்போது நடிக்க வந்துவிட்டார்.
இந்நிலையில் நடிகை சுலக்ஷனா தற்போது ஒரு பேட்டியில் தன் சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.
இதில் நடிகர் கார்த்தி குறித்து, கார்த்திக் எப்போதும் உன்னிடம் பேசும் போது ஏதோ ஆண் நண்பர்களிடம் பேசுவது போலவே உள்ளது, உன்ன பார்த்தா எனக்கு ரொமான்ஸே வரமாட்டுது என்று சொல்வதோடு இயக்குனரிடம் சென்று, இவ கூட எனக்கு ரொமான்ஸ் சீன் வைக்காதீங்க, ரொமான்ஸே வரலனு ஜாலியாக கார்த்திக் சொல்வார் என கூறியுள்ளார்.