சிவாஜி கணேசனை அவமதித்த நடிகர்!! இன்றுவரை காணாமல் போய்ட்டான்!! இயக்குனர் கஸ்தூரி ராஜா..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக 90ஸ் காலக்கட்டத்தில் திகழ்ந்து வந்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. ராஜ் கிரண், பிரபு, விஜயகாந்த், பிரபு, நெப்போலியன், ராதிகா போன்ற நடிகர்களை இயக்கி மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தார். தன் மகன் தனுஷை வைத்து துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உச்சத்திற்கு கொண்டு வந்தார் கஸ்தூரி ராஜா.
சமீபத்தில் சித்ரா லட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்தவகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்துள்ளார். என் ஆசை ராசாவே படத்தில் முக்கிய ரோலில் நடிகர் சிவாஜி கணேசன் நடித்திருந்தார். அப்படத்தின் போது சிவாஜி அவர்களுக்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தும் தயாரிப்பாளர் நஷ்டமாகிவிடக் கூடாது என்பதற்காக அன்று ஷூட்டிங்கில் கலந்து கொண்டு ஷாட்டை முடித்துவிட்டு போனார்.

ஆனால் இப்போது இருக்கும் நடிகர்களிடம் இருந்து மொபைல் போனை கையில் இருந்து புடுங்க படாதபாடுபட வேண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்படி ஒரு காட்சியில் சிவாஜி, மனோரமா, ஜெய்கணேஷ், விஜயகுமார் உள்ளிட்ட நிறைய நடிகர்கள் இருக்கும் நேரத்தில் ஒரு நடிகர் தொலைப்பேசியில் பேசிகிட்டே இருக்கிறார். சிவாஜி அவர்களுக்கு, எந்த இடத்தில் சீக்குவேஷனோ அங்கேயே உட்கார்ந்துப்பார்.
அப்படி கேமரா மேன் ஸ்டார்ட் கேமரா சொன்னதும் சிவாஜி எழுந்துட்டார். அப்போது மொபைலில் பேசிய நடிகர் வரவில்லை. நானும் உடனே ஸ்டார்ட் கேமரான்னு ஆக்ஷன்னு சொன்னதும் அந்த தம்பி ஓடிவந்ததும் நில்லுன்னு நிறுத்திவிட்டு நீங்க இந்த சீன்ல இல்லை என்று கூறிவிட்டேன்.
இது தெரிந்ததும் சிவாஜி என்னிடம் நடிகருக்கு கோபம் வரலாம் இயக்குனருக்கு கோபம் வரக்கூடாது என்று கூறினார். அதன்பின் அந்த நடிகரிடம், அவர் யார் தெரியுமா உங்களுக்கு, உலக வரைப்படத்தில் இந்தியாவுக்கு வெளிச்சம் போட்டு காமிச்சவர், அவரை காத்திருக்க வெச்சவங்க யாரும் நிலைச்சது இல்லை என்று கூறினேன். ஆனால் அதற்கு பின் அந்த நடிகர் சினிமாவில் நிலைக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரி ராஜா.