நீ, நடிகைகளுக்கு அதை செய்தாயா? பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிய 48 வயது நடிகை
90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் 1991 -ம் ஆண்டு வெளியான "ஆத்தா உன் கோயிலிலே" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் கஸ்தூரி, இந்தியன், அமைதிப்படை, தூங்கா நகரம் போன்ற பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
இதைதொடர்ந்து இவர் உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் மக்களிடத்தில் பிரபலமானார்.
அட்ஜஸ்ட்மென்ட்
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில், "நடிகைகள் சினிமாவில் முன்னேற வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்" என்று சர்ச்சையாக பேசினார்.
இதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் நடிகை கஸ்தூரி, " நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறார்கள் என்று எப்படி உங்களுக்கு தெரியும்? நீ எதும், அது போன்று நடிகைகளை அனுப்பி வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு விளக்கு பிடித்து பார்த்தாயா? இதில் இரண்டில் எதை செய்தார் என்று அவர் தான் முடிவெடுக்க வேண்டும்" என கோபமாக பேசியுள்ளார்.