அஜித்தும் இத பண்ணிருக்காரு!! நடிகை கஸ்தூரி காட்டம்..
தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.
கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.
தமிழ் சினிமால கெட்டவார்த்தை வருவது புதுசு இல்ல... அஜித்தும் இத செஞ்சுருக்காரு... ஆனா., விஜய் வாயில் இருந்து அந்த வார்த்தை வருவது சரியல்ல. நீங்க விஜயை இப்படி சொல்ல வச்சது தப்பு.." கெட்டவார்த்தை பேசித்தான் ஹிட் கொடுக்கணுமா என்று நடிகை கஸ்தூரி கூறியிருக்கிறார்.