நான் சொல்லிய உடனே பொது இடத்தில் ஆடை மாத்துனாங்க நடிகை குஷ்பூ.. உண்மையை உடைத்த இயக்குனர்
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்தவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தன் இரு மகன்களான தனுஷ், செல்வராகவனை சினிமாவில் இயக்குனர்களாக நடிகர்களாக ஆளாக்கி அழகு பார்த்து வருகிறார். அதேபோல் இரு மகள்களையும் மருத்துவ படிப்பு படிக்கவைத்து டாக்டர்களாக்கினார்.
இந்நிலையில் சமீபத்தில் சித்ராலட்சுமணன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நடிகை குஷ்பூவுக்கு வயசாகிடுச்சுன்னு வருத்தப்பட்ட முதல் ஆள் நான் தான். அந்தம்மா என்னுடன் 9 படங்களில் நடித்துள்ளார்.
எட்டுப்பட்டி ராஜா படத்தின் போது, ஒரு நாள் அவுட்டோரில் 5 மணிக்கு மேல் ஆனது. அங்கு சுத்தி எந்த மரமும் கிடையாது, அங்கு ஆடையை மாற்றி நடிக்கனும். மாலை நேரமாச்சி லைட்லாம் குறைஞ்சிட்டே இருக்குன்னு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இதை பார்த்த குஷ்பூ, என்னிடம் வந்து என்ன ஆச்சி என்று கேட்டார்.
டிரஸ் மாத்தி எடுக்கனும் என்று சொன்னதும் டிரஸ் தானே மாத்தனும்னு சொல்லிட்டு போனாங்க. ஒரு சேலையை அசிஸ்டண்ட்டிடம் கொடுத்து விரிக்கச்சொல்லி டக்குன்னு மாத்தினாங்க. படத்தை எடுத்து முடித்தோம் என்று கூறியிருக்கிறார்.
ஆனால் இதேபோல் கரிசக்காட்டு பூவே படத்தில் நடித்த நடிகையை, பம்ப் செட்டில் டிரஸ் மாத்திட்டு வர சொன்னேன். நான் அங்கு மாத்தமாட்டேன் ரூமுக்கு தான் மாத்துவேன்னு சொன்னதும் உடனே அனுப்பி வைத்துவிட்டேன். உன்னை நம்பி படமில்லை எழுத்தை நம்பி இல்லை என்று கூறினேன். அப்படி குஷ்பூவை போல் அதை இப்போது யாராவது செய்வாங்களா என்று தெரிவித்துள்ளார்.