அங்க நான் தான் கவர்ச்சி பாம், கவர்ச்சி மாம்!! மேடையில் ஷாக் கொடுத்த நடிகை கஸ்தூரி..
நடிகை கஸ்தூரி
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய நடிகர்களில் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கஸ்தூரி சங்கர். கதாநாயகியாக நடித்து வந்த கஸ்தூரி, குணச்சித்திர ரோலில் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஒருசில படங்களில் கவர்ச்சி ஆட்டம் போட்டு சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம், கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ளது DD நெக்ஸ்ட் லெவல் படம்.
நடிகர் ஆர்யா தயாரித்துள்ள இப்படம் மே 11 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது DD நெக்ஸ்ட் லெவல் படத்தில் கஸ்தூரி சந்தானத்திற்கு அம்மா ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு மேடையில் பேசியிருக்கிறார்.
கவர்ச்சி பாம், கவர்ச்சி மாம்
அதில், முதலில் நீங்கள் சந்தானத்துக்கு அம்மா என்று இயக்குநர் சொன்னதும், ஐய்யய்யோ, என்னங்க இப்படியொரு குண்டைத்தூக்கி போடுறீங்க என்று ஷாக்காகினேன். முதல் சீனில் மட்டும் தான் அம்மா, அதுக்கு பின் முழு அலைப்பறை என்று சொல்லி ஒரு கதையை கூறினார்.
ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கதை கேட்டப்போது நான் சிரித்துக்கொண்டே இருந்தேன், நீங்கள் படம் பார்த்து சிரிப்பீர்கள். இந்த படத்துல அவர் போட்டது குண்டு இல்ல, நான் தான் கவர்ச்சி பாம், கவர்ச்சி மாம், இது ரொம்பவே அனைவருக்கும் பிடிக்கும் என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.