'கஸ்தூரி.. அசிங்கமாவே இல்லையா?': ட்விட்டரில் நெட்டிசனுக்கு நடிகை கொடுத்த பதிலடி

Kasthuri
By Parthiban.A Nov 08, 2022 01:15 PM GMT
Report

பொதுவாக திரை பிரபலங்கள் என்றாலே எப்போதும் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார்கள். அதன் மூலமாக அவர்களுக்கு இன்னும் புகழ் கிடைக்கும் என்பதற்க்காக அதிகம் பதிவுகளை போடுவார்கள்.

ஆனால் அதே நேரத்தில் ட்ரோல்களும் அதிகமாக இருக்கத்தான் செய்யும். அப்படி எல்லா விஷயங்களை பற்றியும் கருத்து பதிவிடும் நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எக்கசக்க ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.

நேற்று உயர்சாதி ஏழைகள் இடஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆதரவாக கஸ்தூரி ட்விட்டரில் பேசி இருக்கிறார்.

அதற்கு நெட்டிசன் ஒருவர் "அது எப்படி எதுவுமே தெரியாம எல்லா விஷயத்தலயும் மூக்க நுழைக்கறீங்க? அசிங்கமாவே இல்லையா?" என கேட்டிருக்கிறார்.

அந்த நபருக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி "மத்தவங்க அறிவை மதிப்பிடற முயற்சி உங்களுக்கு எதுக்கு brother. அதுக்கு ஒரு குறைந்தபட்ச common sense தேவை. உங்ககிட்டே ஏராளமா இருக்குற வெறுப்பையும் வெட்டி நேரத்தையும் வேற ஏதாவது செய்ய பயன்படுத்தலாமே" என பதில் கொடுத்திருக்கிறார்.