கைது செய்ய வந்த போலிஸுக்கே சரக்கு ஊற்றிக் கொடுத்த இயக்குநர்!! சர்ச்சையான சம்பவம்..

Gossip Today Bollywood Tamil Directors
By Edward Apr 03, 2025 12:30 PM GMT
Report

ராம் கோபால் வர்மா

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக திகழ்ந்து பல வெற்றிப்படங்களை இயக்கி பெயர் எடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, தற்போது டோலிவுட்டில் சர்ச்சை இயக்குநர் என்ற பெயரை பெற்று வருகிறார்.

கைது செய்ய வந்த போலிஸுக்கே சரக்கு ஊற்றிக் கொடுத்த இயக்குநர்!! சர்ச்சையான சம்பவம்.. | Police Came To Arrest Ram Gopal Varma Having Drink

சமீபகாலமாக கவர்ச்சி நடிகைகளை வைத்து படுமோசமான காட்சிகள் கூடிய படங்களை எடுத்த ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். மேலும் இரவு சரக்கு பார்ட்டி வைத்து, நடிகைகளுடன் நெருக்கமாக ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து சர்ச்சை விஷயங்களை பகிர்ந்து கைது செய்யும் அளவிற்கு சென்றார்.

கைது செய்ய வந்த போலிஸ்

இதுகுறித்து அவர் கூறுகையில், நான்கு, ஐந்து வருடங்களுக்கு முன் என் டிவிட்டர் பதிவுகளால் என் மீது வழக்கு பதிவு செய்யபப்ட்டு என்னை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்ய வந்த போலிஸுக்கே சரக்கு ஊற்றிக் கொடுத்த இயக்குநர்!! சர்ச்சையான சம்பவம்.. | Police Came To Arrest Ram Gopal Varma Having Drink

அதுகுறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது, ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் என்னை போனில் அழைத்து, உன்னை கைது செய்வதற்கு வருகிறார்கள், சட்டப்படி என்பதால் எதுவும் மோசமாக நடந்துக் கொள்ளாதே என்று கூறினார்.

அதேசமயம் என் வழக்கறிஞர்கள் குழுவுடன் விவாதித்த போது என் மீது பதியப்பட்ட வழக்கில் புதிய சட்டவிதிகளின் படி வழக்கு பதிய முடியாது என்றும் கைது செய்ய முடியாது என்றும் நீதித்துறை கூறியிருந்தது.

ஆனால் இது எதையும் அறியாமல் என்னை கைது செய்ய வந்த போலிசிடம் இந்த தகவலை தெரிவித்ததும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். பின் என் வீட்டிற்குள் வந்து என்னிடம் சேர்ந்து மது அருந்திவிட்டு உற்சாகமாக பேசியப்பின் விட்டு கிளம்பி சென்றனர் என்று ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.