நயன்தாராவுக்காக பாலு மகேந்திர கதையை சுட்ட விக்கி? மண்டைல இருக்க கொண்டைய மறந்திட்டியே!!

samantha nayanthara vijaysethupathi vigneshshivan balumahendra KathuvakkulaRenduKadhal
By Edward Apr 07, 2022 01:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் நடிகர் சிம்புவை இயக்கி இயக்குனராக அறிமுகமாகினார். அதன்பின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் செதுபதி, நயன் தாராவை வைத்து நானும் ரெளடிதான் படத்தினை இயக்கி பெரிய ஹிட் கொடுத்தார். இதைதொடர்ந்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி கதையையும் இயக்கினார். தற்போது தான் காதலித்து வரும் நயன் தாராவிற்காக ஒரு படம் எடுக்க நினைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தின் தயாரித்தும் இயக்கியும் வருகிறார்.

விஜய் சேதுபதி, சமந்தா, நயன் தாரா கூட்டணியில் இப்படம் கூடிய சீக்கிரமே தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தினை கதை இயக்குனர் பாலு மகேந்திராவின் ரெட்டை வால் குருவி படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

1987ல் நடிகர் மோகன், நடிகை, ராதிகா, அர்ச்சனா ஆகியோர் நடித்து மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் பெற்றது. இப்படத்தின் ராஜா ராஜா சோழன் பாடல் இன்றளவும் காதலுக்காக ஒரு பாடலாக இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

அப்படத்தில் கதாநாயகன் இரு கதாநாயகிகளை ஒரே நேரத்தில் காதலித்து எப்படி இருவரையும் சமாளிப்பது தான் கதை. அதேபோல் தான் விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் இருக்கிறது என்று டிரைலர் மூலம் சிலர் கண்டுபிடித்து கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ஹாலிவுட் படமான மிக்கி அண்ட் மவுடே எனும் படத்தின் காப்பி என்று கூறி வந்தனர். காப்பி இயக்குனர்கள் வரிசையில் விக்னேஷ் சிவனும் சேர்ந்துட்டாரே என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.