உசுப்பேத்திவிட்ட மீடியா.. 5 வயது குறைந்த நடிகருடன் காதலில் விழுந்த கத்ரீனா கைஃப்

Bollywood Katrina Kaif Marriage
By Kathick Sep 11, 2022 08:20 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகை கத்ரீனா கைஃப். இவர் கடந்த ஆண்டு தன்னை விட 5 வயது குறைந்த நபரான பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய காதல் கணவரை எப்படி சந்தித்தேன், எப்படி அவரிடம் காதலில் விழுந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார்.

உசுப்பேத்திவிட்ட மீடியா.. 5 வயது குறைந்த நடிகருடன் காதலில் விழுந்த கத்ரீனா கைஃப் | Katrina Kaif About Her Love Experience

இதில் " நாங்கள் இருவரும் காதலிப்பதாக மீடியா வாயிலாக பல செய்திகள் வெளியாகி கொண்டிருந்தது. ஆனால், நாங்கள் உண்மையில் காதலிக்கவே இல்லை. விக்கி கவுசல் பற்றி அப்போது நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், அவரை பற்றி அதிகம் தெரியாது.

விக்கியுடன் பழகியதும் இல்லை. ஒரு விருது விழாவில்தான் முதன் முதலில் அவரை சந்தித்தேன். பார்த்தவுடன் என் மனதில் அவர் இடம் பிடித்துவிட்டார். அவரை காதலிப்பதும் திருமணம் செய்வதும் எனக்கு விதிக்கப்பட்டது " என்று பேசியுள்ளார் கத்ரீனா கைஃப்..