உடல் குறித்த விமர்சனம்..பயத்தால் முடங்கி இருப்பேன்!! நடிகை கத்ரினா கைஃப் ஓபன் டாக்...

Katrina Kaif Tamil Actress Actress
By Jai Oct 09, 2026 01:15 PM GMT
Report

கத்ரினா கைஃப்

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப், விக்கி கெளஷிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து, கடந்த ஆண்டு அவருக்கு குழந்தை பிறந்தது.

உடல் குறித்த விமர்சனம்..பயத்தால் முடங்கி இருப்பேன்!! நடிகை கத்ரினா கைஃப் ஓபன் டாக்... | Katrina Kaif Breaks Silence Trolling Body Shaming

இதனையடுத்து சமீபத்தில் அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியின்போது வருகை தந்தை கத்ரினா, சற்று உடல் எடை கூடி ஆளே மாறிப்போனார். அதை பார்த்த பலரும் கத்ரினாவை கேலி விமர்சனம் செய்தனர். இதற்கு பலத்தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் உடல் பற்றிய கேலி விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், என்னுடைய உடல் தோற்றம் குறித்து வரும் கேலி விமர்சனங்களையும் எதிர்மறையான கருத்துகளையும் மனதில் கொண்டு என்னுடைய செயல்பாடுகளை மாற்றியிருந்தால், பயத்தால் முடங்கி இருப்பேன்.

உடல் குறித்த விமர்சனம்..பயத்தால் முடங்கி இருப்பேன்!! நடிகை கத்ரினா கைஃப் ஓபன் டாக்... | Katrina Kaif Breaks Silence Trolling Body Shaming

வாழ்க்கையில் முன்னேற முடியாமல் போயிருக்கும். சில சமயயங்களில் உலகம் நம்மை பாராட்டும், மற்ற நேரங்களில் நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். சோசியல் மீடியா விமர்சங்கள் நம்முடைய சுயமதிப்பை பாதிக்க அனுமதிக்கக்கூடாது என்று பேசியுள்ளார்.