சத்தியமா நீ என் கல்யாணத்திற்கு வந்துராத.. முன்னாள் காதலரை திருமணத்திற்கு அழைக்காத நடிகை கத்ரீனா கைஃப்..
பாலிவுட் திரை நட்சத்திரங்களான நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கவுசல் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர். தன்னைவிட 5 வயது குறைந்த நபரை நடிகை கத்ரீனா திருமணம் செய்யவுள்ளார். இந்த திருமணம் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் நடைபெறவுள்ளது. தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது.
இவர்களது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார்களாம். திருமணம் நடைபெற உள் இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு Mobile phone-ஸ் எடுத்து வர அனுமதி இல்லையாம். அதே போல், திருமண நிகழ்வுகள் பற்றி எந்த ஒரு பதிவையும், நிகழ்வில் கலந்து கொள்பவர்கள், சமூக வலைத்தளங்களில் கத்ரினா, விக்கி ஆகியோரின் அனுமதி இல்லாமல் பதிவிடக் கூடாது என பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுசல் இருவரும் தங்களுடைய திருமணத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்றால், ரூ. 100 கோடி கொடுக்க வேண்டும் என்று விலையை நிர்ணயம் செய்துள்ளனர். இந்நிலையில், நடிகை கத்ரீனா கைஃப் தனது முன்னாள் காதலரான நடிகர் சல்மான் கானை தனது திருமணத்திற்கு தற்போது வரை அழைக்கவில்லையாம். இதனால், பலரும் கத்ரீனா கைஃப்பை மீம் போட்டு கமெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.