ஒரு நாள் கூத்துக்கு இத்தனை கோடியா? கேத்ரீனா கைஃப் திருமண செலவு எவ்வளவு!!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை கத்ரீனா கைஃப். தன்னைவிட 5 வயது சிறிய இளம் நடிகர் விக்கி கெளசல் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். லிவ்விங் டுகெதர் வாழ்க்கையை வாழந்து வந்த கத்ரீனாவிற்கு எப்போது திருமணம் என்று ஆவலுடன் எதிர்ப்பார்க்கையில் அந்த அறிவிப்பை கத்ரீனா - விக்கி தெரிவித்தனர்.
மூன்று நாட்கள் பிரம்மாண்ட செலவில் நடிக்கவிருப்பதாகவும் ஒருசில முக்கிய பிரபலங்கள் உறவினர்கள் மட்டும் அழைத்து கேமெரா, மொபைல் உபயோப்படுத்தாமல் கடும் பாதுகாப்புடன் நடத்த திட்டமிட்டனர். அதன்படி சமீபத்தில் அவர்களது திருமணம் குஜராத்தின் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோட்டியில் நடைபெற்றது.
120 பேர் மட்டுமே அனுமதித்து நடத்தப்பட்ட திருமணம், சங்கீத், மெஹந்தி, ஹல்தி போன்றவற்றை மட்டும் 4 கோடி அளவில் செலவு செய்துள்ளனராம்.
மேலும் நடிகை கத்ரீனா கைஃப் போட்டிருந்த ஆடையின் மதிப்பு சுமார் 75 லட்ச ரூபாய் என்று தெரியவந்துள்ளது. கோடியில் ஒரு படத்திற்கு சம்பளம் வாங்கினால் இப்படிதான் செலவு செய்யலாம் என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.