லிக்கர் அடித்து தான் பாடல் எழுதுவார கண்ணதாசன்!! வாலி சொன்ன ரகசியம்
கவிஞர் வாலி
தமிழ் சினிமாவில் 5 தலைமுறை நடிகர்களுக்கு தன்னுடைய பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த கலைஞர் தான் கவிஞர் வாலி. புரட்சி தலைவர் எம்ஜிஆர் முதல் சிம்பு வரை பல நடிகர்களின் படங்களுக்கு பாடல் எடுத்தி மிகப்பெரிய சாம்ராஜியத்தை உருவாக்கினார்.
கடந்த 2013 ஜூலை மாதம் 18 ஆம் தேதி தன்னுடைய 81வது வயதில் மரணமடைந்தார் கவிஞர் வாலி. அவர் அளித்த பேட்டியொன்று தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில், நான் காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் பாடல்களை எழுதி முடித்துவிடுவேன். அப்போது டியூனுக்கு எழுதுவதில்லை. கேசட் எல்லாம் அதன்பின் தான் வந்தது. இசையமைப்பாளர்களிடம் செல்லும் முன் பல்லவியை தயார் செய்து கொண்டுபோக, இதை செய்வேன்.
அதன்பின் கேசட் வந்தவுடன் டியூன் வீட்டுக்கு வந்துவிடும், அப்போது நான் காலை 4-6 மணிக்கு பாடல் எழுதுவேன். பாடலை எழுதி வைத்துவிட்டு, தயாரிப்பு நிர்வாகி வந்தால், கொடுத்துவிடுமாறு சொல்லிவிட்டு தூங்கிவிடுவேன்.
கண்ணதாசன்
மூடு இல்லாமல் பாடல் எழுத முடியாமல் போயிருக்கிறேன் என்றால், ரெக்கார்ட்டிங் தியேட்டருக்கு சென்று எழுதுவேன். அது வரவில்லை என்று கடற்கரை, குளிர்ந்த காற்று, இப்படி எல்லாம் இருந்தால் தான் மூட் வரும் என்பது எனக்கு இல்லை. எனக்கு கண்ணதாசனுக்கும் இப்படி இல்லை. கண்ணதான் லிக்கர்(மது) சாப்பிட்டால் தான் பாடல் எழுதுவார் என்று சொல்வார்கள், அது தவறு. பாடல் எழுதும்போது கண்ணதாசன், சிகரெட் இழுப்பார், பல்லவி சொல்வார், சரி இல்லை என்றால் நாளைக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிடுவார், ஆனால் பாடல் எழுத உட்கார்ந்துவிட்டால், அதில் சின்சியராக இருப்பார் என்று கவிஞர் வாலி தெரிவித்துள்ளார்.