கவின் லாஸ்லியா காதல் தோல்வியா..! அப்போ வீட்டுக்குள்ள நடந்தது எல்லாமே பொய்யா

love losliya kavin breakup
By Karthick Raja Apr 02, 2022 12:40 PM GMT
Report

பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவ்விருவரும் காதலிக்கிறார்கள் என்று நிகழ்ச்சியை பார்த்த ஒவ்வொருவரும் கூறினாலும், லாஸ்லியா - கவின் இருவரும் ஒரு முறைகூட நாங்கள் காதலிக்கிறோம் என்றும் கூறவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை லாஸ்லியா அளித்த பேட்டியில் தனது காதல் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். இதில் தான், கவினை காதலித்ததாக கூறியுள்ளார். மேலும், நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தோம் என்று, ஆனால், அது எங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் கூறியுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் நாங்கள் வேறு மாதிரி இருந்தோம்.

ஆனால், வெளியே வந்ததும் சில மனிதர்கள் மாறிவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதன்முலம், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் காதல் தோல்வியால் பிரித்துவிட்டார்கள் என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.