நல்ல நாள் பாத்து மாத்துரேன்..மஞ்சள் தாலியுடன் செல்ல இதான் காரணம்!! கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின் ரஜினி முருகன், பைரவா, மகாநதி, சர்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி தற்போது ஹிந்தி சினிமாவிலும் வலம் வர தொடங்கி விட்டார். அவர் நடித்த பேபி ஜான் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருந்தது.
தமிழில் ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் பேபி ஜான். பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருந்தாலும் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது.
மஞ்சள் தாலி
சமீபத்தில், தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமணத்திற்கு பின் மஞ்சள் தாலியுடன் செல்வது குறித்த விளக்கத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் ஒரு குறிப்பிட்ட நாட்கள் வரை மஞ்சள் கயிறை மாற்றுவதற்கு நல்ல நாள் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனவரி இறுதியில் மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.