அனிமல் யோகா.. ட்ரோல்களில் சிக்கிய முன்னணி நடிகை! இனி இது தான் ட்ரெண்டிங்
Keerthy Suresh
By Dhiviyarajan
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் தமிழில் சைரன், ரகு தாத்தா, மாமன்னன், ரிவால்டர் ரீட்டா போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி, சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

ட்ரோல்
சமீபத்தில் இவர் 'அனிமல் ப்லொவ்' என்ற யோகா பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு எடுத்து வீடியோ ஒன்றை அவரின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் 'என்ன போஸ் இதெல்லாம்' என்று கீர்த்தியின் புகைப்படத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.