சூப்பர் சிங்கர் பிரகதியுடன் காதலில் அசோக் செல்வன்!! திருமணத்திற்கு பின் முற்றுப்புள்ளி வைத்த நடிகை கீர்த்தி பாண்டியன்...
நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாக தும்பா படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்கு அறிமுகமாகியும் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் கண்ணகி படத்தில் முக்கிய ரோலில் நடித்த கீர்த்தி பாண்டியன், நடிகர் அசோக் செல்வனை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் இருவரும் இணைந்து Blue Star என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இன்று இப்படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக இதற்கு முன் பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வந்தனர்.
சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வதந்திகள் குறித்து உங்களின் ரியாக்ஷன் என்ன என்று கீர்த்தி பாண்டியனிடம் கேட்கப்பட்டது. அதற்கு கீர்த்தி, எல்லாமே பார்த்து சிரிப்பு தான் வந்தது. குறிப்பாக பிரகதி (சூப்பர் சிங்கர்) என்னோட ரொம்பவே நெருக்கமான தோழி. அதன்பின் எல்லோரும் நண்பர்களாக கேங்க்-ஆ இருக்கும் போது அசோக் செல்வன் அறிமுகமாகினார்.
அப்போது பிரகதி அமெரிக்காவில் அசோக் செல்வனை சந்தித்து, ஒரு ட்ரிப் சென்றபோது, கல்யாணமாகிவிட்டது என்று செய்திகள் வெளியானதை பார்த்து ரொம்பவே சிரிப்பாக இருந்தது.
ஏனென்றால் எல்லோரும் கேங்க் அப் நண்பர்கள் என்று கூறி அசோக் செல்வன் - பிரகதி காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். சில ஆண்டுகளுக்கு முன் அசோக் செல்வன் - சூப்பர் சிங்கர் பிரகதி காதலில் இருந்து திருமணம் செய்யவுள்ளார்கள் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
