விஜய்க்கு இரண்டு பிளாப் கொடுத்த நடிகை.. தளபதி 67-ஆல் கோபத்தில் ரசிகர்கள்..

Vijay Keerthy Suresh Trisha Lokesh Kanagaraj
By Edward Aug 21, 2022 05:35 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவும் இருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் தளபதி 67 படத்தினை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

அதற்கான பணிகளை ஆரம்பிக்க சமுகவலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி கதை எழுத ஆரம்பித்துள்ளார் லோகேஷ். ஒருசில அப்டேட் விசயங்கள் இணையத்தில் பரவி வருவது தெரிந்த ஒன்று தான். அப்படி வில்லியாக நடிகை சமந்தாவும், பிரித்திவிராஜ், பிரகாஷ்ராஜ் என்று பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

தற்போது நடிகை திரிஷா விஜய்யுடன் 15 வருடங்களுக்கு பிறகு நடிக்கவுள்ளாராம். மற்றொரு கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய்யுடன் ஜோடிப்போட்டு நடித்த சர்கார், பைரவா தோல்வி படங்களாக அமைந்தது. அப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷை எப்படி புக் செய்வீங்க என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

மேலும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்த பல படங்கள் தோல்வியையே சந்தித்து வருவதும் இதற்கான ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.