கீர்த்தி சுரேஷ் நிலைமை இப்படி ஆகிடுச்சே! மறுபடியும் இப்படியா நடக்கணும்

Keerthy Suresh Flops
By Parthiban.A Feb 01, 2022 03:30 PM GMT
Report

கீர்த்தி சுரேஷ் தேசிய விருது வாங்கும் அளவுக்கு படங்களில் நடித்ததெல்லாம் ஒரு காலம். தற்போது அவர் அதிகம் கஷ்ட காலத்தில் இருக்கிறார். ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருவது பற்றி சினிமா துறையில் பேசு பொருளாகவே மாறி இருக்கிறது.

அவர் நடிப்பில் ஏற்கனவே பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற படங்கள் பெரிய ரெஸ்பான்ஸ் பெறவில்லை. அதன் பின் கடந்த ஜனவரி 28ம் தேதி வெளியான குட் லக் சகி படம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவே இல்லை.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் நடித்து அவருக்கு இது மூன்றாவது பிளாப் என்றும் சொல்லலாம். இது ஒருபுறம் என்றால் அவர் நடிகையாக மட்டும் வந்த அண்ணாத்த மற்றும் மராக்கர் ஆகிய படங்களும் பெரிய பிளாப் தான்.

அந்த வகையில் தொடர் தோல்விகளால் கீர்த்தி சுரேஷ் கெரியரே உச்சத்தில் இருந்து பாதாளத்திற்கு சரிந்திருக்கிறது. இதை சரிசெய்ய கீர்த்தி என்ன செய்ய போகிறார்?