அப்படியே ராசி இல்லாத நடிகையா மாறிட்டீங்களே கீர்த்தி.. டாப் 5 கூட இல்லையா!
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள சினிமாவில் வாரிசு நடிகையாக இருந்து தமிழில் அறிமுகமாகினார்.

சினிமா வாழ்க்கையில் வெறும் 7 வருடம்
நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆர்ம்பித்தார். 2015ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் வெறும் 7 வருடத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஆனால், சாணிக்காயிதம், மகாநதி போன்ற படங்களை தவிர்த்து கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் தோல்வியை பெற்று வந்தது. சர்கார், பைரவா, சாமி 2, சண்டைக்கோழி, பாம்புசண்டை, தானா சேர்ந்த கூட்டம், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்கள் தமிழில் படுதோல்வியை அடைந்தது. இதனால் கீர்த்தி சுரேஷ் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்று வந்தார். சமீத்தில் கூட சர்க்கார் வாரிப்பாட்டா படம் படுதோல்வியடைந்து விமர்சனத்திற்குள்ளாகினார்.

மோஸ்ட் பாப்புலர் நடிகைகள்
இதனால் தென்னிந்திய ரசிகர்களை கவர்வதில் சறுக்கல்களை சந்தித்து வந்தார். இதனால் போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார். ஆனால் தெலுங்கில் ஆதிக கவனம் செலுத்தி வரும் கீர்த்தி சுரேஷ் ஆர்மேக்ஸ் ஊடகம் வெளியிட்ட மோஸ்ட் பாப்புலர் நடிகைகள் லிஸ்ட்டில் 8வது இடத்தினை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த இடத்தில் தெலுங்கில் புஷ்பா படத்திற்கு பின் நடிக்காத நடிகை சமந்த முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய நடிகையாக இருந்து என்ன? படம் ஓடவில்லையே என்று கீர்த்தி சுரேஷை கலாய்த்து வருகிறார்கள்.