இதுவரை இல்லாத கிளாமர் லுக்!! நடிகை கீர்த்தி சுரேஷ்-ஆல் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
மலையாள பெண்ணாக தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் 2015ல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பின் தனுஷ், விக்ரம், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்றாலும் அவர் நடித்து பல படங்கள் தோல்வியை சந்தித்ததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் நானியுடன் தசரா படத்தில் நடித்திருந்தார்.
குடும்பபாங்கான ரோலில் அடக்கவுடக்கமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படி கிளாமர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
சமீபத்தில் இதுவரை இல்லாத கிளாமர் லுக்கிற்கு மாறி அப்படியொரு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.