ராக்ஸ் ஸ்டாருடன் கீர்த்தி சுரேஷ்-க்கு கல்யாணமா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தந்தை..
இது என்ன மாயம் படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளியான போலோ சங்கர் படம் வரை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபகாலமாக பல நடிகர்களுடன் காதலில் இருப்பதாகவும் விஜய் மற்றும் அனிருத் போன்றவர்களின் பெயரை கூறி அவர்களுடன் திருமணம் என்ற செய்தியும் அவ்வப்போது வெளியானது.
ஆனால் இசையமைப்பாளர் அனிருத்தை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார் கீர்த்தி சுரேஷ் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் அதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ், வட இந்திய ஊடகங்கள் தன்னை பற்றியும் அனிருத்துடன் திருமணம் தொடர்பாக பரவும் செய்திக தவறானது என்றும் தனக்கு அவர் நல்ல நண்பர் என்றும் கூறியுள்ளார்.
திருமணம் நடக்கும் என்ற பதிலையும் கூறியிருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷின் தந்தை முழுமையான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதாவது, கீர்த்தி சுரேஷ் இன்னாரை திருமணம் செய்து கொள்ள இருப்பது என்ற தகவல் வந்தாலும் அது உண்மைக்கு புறம்பானது என்றும் பொய்யானது என்றும் திருமணம் என்றால் அதை நாங்களே சொல்வோம்.
அனிருத் குடும்பத்தினருடன் நாங்கள் திருமணம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
