நடிச்சதெல்லாம் போதும்.. கீர்த்தி சுரேஷ் அம்மா எடுத்த முடிவால் ரசிகர்கள் ஷாக்
கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் முதலில் குண்டாக இருந்தாலும் தேசிய விருது வாங்கும் அளவுக்கான படங்களில் நடித்தார். ஆனால் தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லி ஆகி இருக்கும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
அதனால் சற்று கிளாமர் கூட்டி நடிக்க தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் மகேஷ் பாபு படத்தில் அவர் அணிந்து வந்த உடைகளை பார்த்தல் கீர்த்தியா இப்படி என எல்லோரும் ஷாக் ஆவார்கள். மேலும் நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என எப்போது சொன்னேன் என விமர்சனத்திற்கு பதிலடி வேறு கொடுத்து இருக்கிறார்.
மேலும் ஓடிடியில் ரிலீஸ் ஆனா அவரது ஒரு படத்தில் பல மோசமான காட்சிகளிலும் அவர் நடித்து இருந்தார்.
சமீப காலமாக கீர்த்தி போகும் வழியை பார்த்து அவரது அம்மா டென்சன் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை நடித்ததெல்லாம் போதும்.. திருமணம் செய்து கொள் என கீர்த்திக்கு அவர் கூறிவிட்டாராம். இதனால் அவர் என்ன செய்வது என குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.
