அவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவில்லை..பதில் அடி கொடுத்த அவரின் தாயார்
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய திரையுலகத்தில் தனக்கென இடத்தை பிடித்துள்ளவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் "இது என்ன மாயம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் தமிழ், தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்தார். 2018 -ம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படத்தில் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து எட்டுத்திக்கும் பிரபலமானார்.
தற்போது கீர்த்தி சுரேஷ், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்து தெடுத்து நடித்து வருகிறார்.
காதல் விவகாரம்
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் படித்த நபரை 13 ஆண்டுகளாக காதலித்து வருகிறார் என்று செய்தி இணையத்தில் உலா வந்தது.
இந்நிலையில் இது குறித்து பேசிய கீர்த்தி சுரேஷின் அம்மா, " கீர்த்தி சுரேஷின் திருமண செய்தி முற்றிலும் பொய்யான தகவல். பரபரப்புக்காக சிலர் இது போன்ற செய்திகளை கிளப்பிவிட்டார்கள்" என்று கூறியுள்ளார்.