அவர் கூட எல்லாம் நடிக்க முடியாது! நிராகரித்த கீர்த்தி சுரேஷ்

Keerthy Suresh Jayam Ravi
By Parthiban.A Mar 07, 2022 01:00 PM GMT
Report

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் இடத்துக்கு வந்தாலும் அதன் பின் சோலோ ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

மகாநடி படம் தவிர வேறு எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தற்போது சின்ன ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கி இருக்கிறார் அவர். உதயநிதி ஜோடியாக அவர் நடிக்கும் மாமன்னன் பட ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இந்நிலையில் எஸ்எம்எஸ் பட புகழ் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க கீர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சில தினங்கள் முன்பு செய்தி வந்தது.

ஆனால் தற்போது கீர்த்தி ஒப்புக்கொள்ளவில்லை என உறுதியான தகவல் வந்திருக்கிறது.