விருதுவிழாவில் தங்க சிலையாக வந்த கீர்த்தி சுரேஷ்!! புகைப்படங்கள் இதோ..

Keerthy Suresh Nani Dasara Movie
By Edward Sep 18, 2024 07:30 AM GMT
Report

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

மகாநடி படத்திற்கான தேசிய விருதை பெற்று தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக மாறி வந்தார். தற்போது தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் முக்கிய ரோலில் நடித்து வரும் கீர்த்தி நடிப்பில் ரகு தாத்தா படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விருதுவிழாவில் தங்க சிலையாக வந்த கீர்த்தி சுரேஷ்!! புகைப்படங்கள் இதோ.. | Keerthy Suresh Post Siima Award For Dasara Naani

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கேரள ஸ்டைலில் துபாயின் ஓணம் கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் துபாய்யில் நடந்த SIIMA விருதுவிழாவில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ், தெலுங்கு மொழிக்கான தசரா படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றுள்ளார்.

விருதுவிழாவில் தங்கநிற ஆடையணிந்து வந்த கீர்த்தி சுரேஷ், அங்கு எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.