தாலிக்கு பதில் பாம்பு ஜெயின்!! கிளாமர் லுக்கில் வந்த கீர்த்தி சுரேஷ்!! மிரண்டுபோகும் ரசிகர்கள்..
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.
பாம்பு ஜெயின்
சமீபத்தில் மும்பையில் நடந்த, நகை கண்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கிளாமர் ஆடையணிந்து கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியின் போது எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷை பார்த்து, பலரும் வியந்துபோய் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.
அதற்கு காரணம் திருமணத்தின் போது அணிந்த தாலியை கழட்டிவிட்டு கிளாமர் லுக்கில் வந்ததை தான் நெட்டிசன்கள் கீர்த்தி சுரேஷை ட்ரோல் செய்து வருகிறார்கள்.