விஜய்யுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் ரீல் மகன்.. கட்டிப்பிடத்தபடி வெளிவந்த புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் சோலோவாக நடித்து கடந்த 2020ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பென்குயின். இப்படத்தில் இவருக்கு மகனாக ஒரு சிறுவன் நடித்திருந்தார்.இப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சிறுவன் தற்போது விஜயுடன் இணைந்து நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷுக்கு மகனாக நடித்த சிறுவன் நடித்துள்ளதை இயக்குனர் வம்சி உறுதி செய்துள்ளார். ஆம், வம்சி அந்த சிறுவனை படப்பிடிப்பில் கட்டிப்பிடத்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதன்முலம் அந்த சிறுவன் விஜய்யுடன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

