எனக்கு ரொம்ப பயம்..நோ சொன்னேன்..ஆனா!! நடிகை கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..
கீர்த்தி சுரேஷ்
மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழில் மெகா பிளாக் பஸ்டரான ரஜினி முருகன் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து, விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது பாலிவுட்டிலும் கலம் கண்டு வருகிறார். தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி கான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், ஆனால் படம் பிளாப்பானது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த 2024ல் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மகாநடி படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார்.

எனக்கு ரொம்ப பயம்
அதில், மகாநடி படத்தில் முதலில் பயத்திலேயே நோ சொல்லிவிட்டேன். எல்லோருமே ஏன் இவ்வளவு பெரிய பிராஜெக்ட்டை வேண்டாம் என்று சொல்கிறாய் என்று கேட்டார்கள். ஆனால் இப்போது நினைத்து பார்த்தால் அது எல்லாமே மேஜிக் மாதிரி இருக்கிறது.
அந்த படத்திற்கு பின் எனக்கு நிறைய பயோபிக் ஆஃபர்கள் வந்தன. ஆனால் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் எல்லா நேரமும் அது ஒர்க் ஆகும் என்று தெரியாது என்று தெரிவித்துள்ளார்.