ராசியில்லா நடிகைன்னு சொல்லி.. மனம் உடைந்த நடிகை கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷ் திருமணம்
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் கோவாவில் இவருடைய திருமணம் விமர்சையாக நடைபெற்று முடிந்தது. தனது 15 வருட காதலரான ஆண்டனியை கீர்த்தி சுரேஷ் கரம்பிடித்தார்.
திருமணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வந்தார். அப்போது, கீர்த்தி மாடர்ன் உடையில் தாலி தெரியும்படி வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையில் சிக்கியது.
இந்நிலையில் பாலிவுட் மீடியாவுக்கு பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், தன்னை ராசியில்லா நடிகை என்று கூறியது பற்றி பகிர்ந்துள்ளார்.
ராசியில்லா நடிகை
தனது முதல் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது, அடுத்த படம் ரிலீஸாக தாமதமானது. அப்போது மக்கள் தன்னை துரதஷ்டசாலி(not lucky) என்று அழைக்க ஆரம்பித்தனர்.
இந்த விஷயங்கள் ஒருபோதும் நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் அவை தனக்கு வலி தந்தது என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது பாலிவுட்டில் அவர் நடிப்பில் வெளியான பேபி ஜான் படமும் மிகப்பெரிய தோல்வியை அளித்து வருவதால் மீண்டும் ரசிகர்கள் அப்படியான வார்த்தையை கூறி விமர்சித்து வருகிறார்கள்.