பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவையும் தாண்டி தற்போது பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இவருடைய திருமணம் நடைபெற்றது. தனது 15 வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம்பிடித்தார் கீர்த்தி.
இந்த திருமணத்தில் தளபதி விஜய் முதல், தொகுப்பாளினி டிடி வரை பலரும் கலந்துகொண்டனர். பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகும் கீர்த்தி இதுவரை எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு கிளாமராக நடித்துள்ளார்.
இந்த நிலையில், பேபி ஜான் படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ரூ. 4 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.
தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை கீர்த்தி சம்பளமாக பெற்று வந்துள்ளார் என சொல்லப்படுகிறது. அதை விட அதிக சம்பளத்தில் தான் பாலிவுட் படத்தில் நடித்துள்ள கீர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.