நானியின் Item பாடலுக்கு ஆட கீர்த்தி சுரேஷின் சம்பளம்..
கீர்த்தி சுரேஷ்
மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழில் மெகா பிளாக் பஸ்டரான ரஜினி முருகன் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து, விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது பாலிவுட்டிலும் கலம் கண்டு வருகிறார்.
தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி கான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார், ஆனால் படம் பிளாப்பானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடந்த 2024ல் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மீண்டும் நடிகர் வெங்கடேஷன் படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்டார் நானி ஹீரோவாக நடிக்கும் தி பாரடைஸ் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடவுள்ளாராம்.
படத்தில் 4 நிமிடம் வரும் அப்பாடலுக்கு நடனமாட கீர்த்தி சுரேஷ், ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தரப்பில் கீர்த்தி சுரேஷின் சம்பலம் குறித்து எதுவும் கூறவில்லை என்றாலும் ரூ. 1 கோடி வாங்கவில்லை என்பது மட்டும் தெளிவுப்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.