விஜய்யுடன் அந்த மாதிரி விஷயத்தை செய்யாமல் விட்டது பெரிய தப்பு.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கீர்த்தி சுரேஷ் 2015 -ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் "தசரா" திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனமே கொடுத்தனர்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில், விஜய் ஒருமுறை போக்கிரி படத்திற்காக கேரளா வந்திருந்தார். அந்த சமயத்தில் நான் புகைப்படம் எடுத்தேன். ஆனால் அந்த காலகட்டத்தில் செல்பி தொழில்நுட்பம் இல்லை. இருந்திருந்தால் நான் விஜய் உடன் சேர்த்து புகைப்படம் எடுத்து கொண்டிருப்பேன். நான் புகைப்படம் எடுக்காமல் விட்டது தவறு தான் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ், விஜய் இருவரும் தொடர்பில் இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுப்படுவது குறிப்பிடத்தக்கது.