எனக்கு 3 குழந்தைகள்..தூக்கமே இல்ல..ஒரே போராட்டமா இருக்கு!! யோகி பாபு..
யோகி பாபு
விஜய் டிவியில் 90ஸ் காலக்கடத்தில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்நிகழ்ச்சியில் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிவர் தான் யோகி பாபு. தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் யோகி பாபு, முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார்.
இயக்குநர் இளன் இயக்கி நடித்துள்ள பியார் பிரேமா கல்யாணம் படத்திலும் யோகி பாபு நடித்துள்ளார்.

சமீபத்திய இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு யோகியிடம் இளன், திருமணத்திற்கு பின் உங்கள் மனைவி கொடுத்த சூப்பர் கிஃப்ட் எது என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த யோகி பாபு, 3 குழந்தைகளை கொடுத்திருக்கிறார்கள், அதுவே கிஃப்ட் தான் என்று சொல்ல அடுத்து எப்போ சார் என்று இளன் கேட்டுள்ளார். அதற்கு யோகி, போதும் ப்பா..இதுக்கே என்னால் தூங்க முடியல, குழந்தைகளோடு போராட்டமா இருக்கும் என்று கலகலப்பாக பேசியுள்ளார் யோகி.