யஷுடன் நெருக்கமான காட்சி!! என் கணவர் பொருட்படுத்தவே இல்லை!! கியாரா அத்வானி ஓபன் டாக்..

Yash Kiara Advani Gossip Today Toxic
By Jai Nov 14, 2026 07:45 AM GMT
Report

டாக்ஸிக் படத்தில் நடிகர் யஷுடன் நெருக்கமான காட்சியில் நடித்ததை என் கணவர் பொருட்படுத்தவே இல்லை என்று கதாநாயகி கியாரா அத்வானி ஓபனாக பேசியுள்ளார்.

யஷுடன் நெருக்கமான காட்சி!! என் கணவர் பொருட்படுத்தவே இல்லை!! கியாரா அத்வானி ஓபன் டாக்.. | Kiara Advani Criticism Intimate Scenes In Toxic

டாக்ஸிக்

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன் தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் தான் டாக்ஸிக்.

ஆகஸ்ட் 26 ஆம் தேதி ரிலீஸான இப்படம் படுமோசமான விமர்சனத்தை பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸில் பெரிய அடியை வாங்கியது. 500 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டு உருவான டாக்ஸிக் படம், ரிலீஸாகி மொத்தம் வெறும் ரூ. 350 கோடிகள் மட்டுமே வசூலித்து பிளாப்பானது.

யஷுடன் நெருக்கமான காட்சி!! என் கணவர் பொருட்படுத்தவே இல்லை!! கியாரா அத்வானி ஓபன் டாக்.. | Kiara Advani Criticism Intimate Scenes In Toxic

கியாரா அத்வானி

டாக்ஸிக் படம் தோல்வியால் மனமுடைந்ததாக கியாரா அத்வானி கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியிருந்தார். மேலும் யஷுடன் நெருக்கமான காட்சியில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.

யஷுடன் நெருக்கமான காட்சி!! என் கணவர் பொருட்படுத்தவே இல்லை!! கியாரா அத்வானி ஓபன் டாக்.. | Kiara Advani Criticism Intimate Scenes In Toxic

அதில், என்னுடைய பயணத்தில் இதுவொரு திருப்புமுனையாக அமையும் என்று நான் நினைக்கிறேன். படத்தில் யஷுடன் நெருக்கமான காட்சிகளுக்காக தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டேன், இக்காட்சிகளை என் கணவர் சித்தார்த் ஒருபோதும் ஒரு பிரச்சனையாக கருதவில்லை. எங்களுக்குள் இந்த விஷயம் குறித்து பேசிக்கொள்ளவே இல்லை. அது அவரை பாதிக்கவும் இல்லை. அதைப்பற்றி அவர் கவலைப்படவும் இல்லை.

சினிமாவிலுள்ள பெண்களுக்கு இது ஒன்றும் புதிய அனுபவம் அல்ல. இது பல ஆண்டுகளாக பல தசாப்தங்களாக நடந்து வருகிறது. ஐஸ்வர்யா தொடங்கி பல அற்புதமான நடிகர்கள் வரை இதுபோல் நடந்துள்ளது. இன்னொரு விஷயம் என்று சொல்லப்போனால், சோசியல் மீடியா ட்ரோல்கள் எழும்போது அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார் என்று கூறியிருக்கிறார்.